கொரோனா தொற்றை எதிர்கொள்ள மத்திய அரசு தயார்- சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார்

முன்னாள் பாரதப்பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாள் விழா புதுச்சேரி மாநில பாஜக சார்பில் கொண்டாடப்பட்டது
கொரோனா தொற்றை எதிர்கொள்ள மத்திய அரசு தயார்-  சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார்
Published on
Updated on
1 min read

கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பாஜக எம்.பி செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாஜ்பாய் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், இந்தியாவில் 220 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் நாடுமுழுவதும் கொடுக்கப்பட்டு மிகப்பெரிய சாதனைபடைத்துள்ளது என்றும் இரண்டாவது அலைக்குப்பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்த அவர்  12 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பதற்கு சோதனை முயற்சி மேற்கொண்டு நடைபெற்று வருகின்றது என்றார்

மேலும் நாட்டில் இதுவரை 4 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பு கண்டறியபட்டுள்ளதாகவும், இருப்பினும் புதியவகை கொரோனாவை தடுக்கவும், எதிர்கொள்ளவும் மத்திய அரசு தயாராக உள்ளது எனவும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com