

மனிதர்களின் வக்கிர மனநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நெஞ்சை உலுக்கும் விதமாக தினம் தினம் அரங்கேறி வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் உள்ளது ஹலியாபூர் சுங்கச்சாவடி, இதன் அருகே சில தினங்களுக்கு முன்பு புதிதாக திருமணமான தம்பதி “தங்களை காருக்குள்ளே நெருக்கமாக இருந்துள்ளனர்.” டோல் கேட்டில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இவர்கள் சிக்கியுள்ளனர்.
ஆனால் சில தினங்களுக்கு பிறகு இவர்கள் ஹலியாபூர் சுங்கச்சாவடி அருகே இருந்த ‘அந்தரங்க வீடியோ’ தன்னிடம் இருப்பதாகவும் தான் கேட்கும் பணத்தை தரவில்லையெனில் இணையத்தில் வெளிவிட்டுவிடுவதாகவும், ஒரு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. அந்த மர்ம ஆசாமி கேட்ட ரூ.32,000 பணத்தை கொடுத்தபோதும், அந்த வீடியோ இணையத்தில் பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்த தம்பதி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்துள்ளன. இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர், அதே சுங்கச்சாவடியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்த அஷுதோஷ் பிஸ்வாஸ் என்பது விசாரணையில் வெளிவந்துள்ளது. மேலும், இவர் இது போன்ற சுங்கச்சாவடி அருகே தனிமையில் இருக்கும் ஜோடிகள் கேமராவில் சிக்கினால் அதனை ரெக்கார்ட் செய்து, அவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இணையத்தில் வெளியான வீடியோக்களை பார்த்த பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக போலீசில் புகார் அளித்ததன் மூலம் இந்த பெரும் குற்றம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிஸ்வாஸ் வழக்கமாக விரைவுச்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்தி பயணிகளையும், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்களையும், சிறுமிகளையும் கண்காணித்து, "ஆபாசச் செயல்களை"ப் பதிவுசெய்து, அந்த வீடியோக்களைப் பயன்படுத்தி பணம் பறித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, சுங்கச்சாவடி ஊழியர்களை நிர்வகிக்கும் ஒப்பந்த நிறுவனம் பிஸ்வாஸை பணிநீக்கம் செய்துள்ளது.
சுங்கச்சாவடியில் இது போன்றொரு குற்றம் நடந்தது படங்களில் கூட வராத ஒன்று. நாடு முழுக்க குற்றச்சம்பவங்கள் வித விதமாக அதிகரித்து வருகின்றன. இம்மாதிரியான சூழல் எப்போதும் பெண்களின் கண்ணியாதியும், பாதுகாப்பையும், அந்தரங்கத்தையும் ஆபத்துக்குள்ளாக்குவதாகவே அமைகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.