இலங்கை பிரச்சனையில் தலையிட  மத்திய அரசுக்கு வலியுறுத்தல்..!

இலங்கை பிரச்சனையில் தலையிட மத்திய அரசுக்கு வலியுறுத்தல்..!

Published on

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை  தமிழக எம்.பிக்கள் டி.ஆர். பாலு, தம்பிதுரை ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். 

இலங்கை விவகாரத்தில் தலையிடாத இந்தியா உதவிகளை மட்டும் நல்கி வருகிறது:

இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனாலும், அவ்விவகாரத்தில் எதிலும் தலையிடாத மத்திய அரசு அங்கு வாழும் தமிழர்கள் நலனுக்காக மட்டும் உதவிகளை வழங்கி வருகிறது. 

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தல்:

இந்தநிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என தமிழக எம்.பிக்கள் டி.ஆர். பாலு, தம்பிதுரை ஆகியோர் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வருகிற  செவ்வாய் கிழமை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com