
சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் கடந்த வியாழக்கிழமை(மே 08) அதிகாலை பாகிஸ்தான் அதிக சேதத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தும் நோக்கில் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள 15 இடங்களில் பொதுமக்கள் வாழும் பகுதி மற்றும் ராணுவ பகுதிகளை தாக்கி அழிப்பதற்காக ஆளில்லா ட்ரோன்கள், சக்திவாய்ந்த ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை ஏவியது.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவப்படை மற்றும் விமான படை பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை விண்ணிலேயே இடைமறித்து தாக்கி அழித்தன. இருப்பினும் நமக்கு சிறிய அளவாக உதம்பூர்,பதன்கோட், ஆதம்பூர் மற்றும் பூஜ் ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களில் சேதமும் மற்றும் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு காயங்களும் ஏற்பட்டது.
இதை குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் கர்னல் சோபியா குரேஷி ஆகியோருடன் அரசாங்க மாநாட்டில் உரையாற்றிய விங் கமாண்டர் வியோமிகா சிங், “பாகிஸ்தான் பல காலங்காலமாகவே இந்தியாவிற்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஏற்படுத்திவருகிறது.
சிந்தூர் ஆபரேஷன்
பாகிஸ்தான் பஹல்காமில் நடத்திய தாக்குதலுக்கு எதிராக நடத்திய சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ இடங்களோ மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளோ தாக்கப்படவில்லை. துல்லியமாக குறிவைத்து பயங்கரவாத முகாம்களே தாக்கி அழிக்கப்பட்டது.
சிந்தூர் தாக்குதல் பாகிஸ்தானிய மக்களையும் வழிபாடு இடங்களையும் தாக்கி அழித்தது என்று பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியது "உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தானின் நற்பெயர் உலகம் முழுவதும் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் வேரூன்றியுள்ளது" என்றும்.
16 அப்பாவிகள் உயிரிழப்பு
எல்லையில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 16 அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளனர். வியாழக்கிழமை காலை நடத்திய தாக்குதலில் கூட வருந்தத்தக்க விதமாக பாகிஸ்தான் ஒரு மருத்துவமனை, பள்ளி வளாகங்கள் உட்பட பொதுமக்கள் பகுதிகளைத் தாக்கியுள்ளது.
இந்திய கொடுத்த பதிலடி
இதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக ரஃபிகி, முரித், சக்லாலா மற்றும் ரஹீம் யார் கான் ஆகிய இடங்களில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. சுக்கூர் மற்றும் சுனியாவில் உள்ள பாகிஸ்தானின் இராணுவ நிறுவல்கள், பஸ்ரூரில் உள்ள ஒரு ரேடார் தளம் மற்றும் சியால்கோட் விமானத் தளமும் குறிவைக்கப்பட்டன, என்றார்.
சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அரசு இறுதி சடங்குகளை வழங்கியது மற்றும் பயங்கரவாததிற்கு மத தளங்களை மறைப்பாக பயன்படுத்துகிறது, என்றும்.
இராணுவ இலக்குகள் மீதான எந்தவொரு தாக்குதலும் பொருத்தமான பதிலடியை இந்திய அளிக்கும் என்பதையும் வலியுறுத்தி பேசியுள்ளார் விங் கமாண்டர் வியோமிகா சிங்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்