"பொறுத்திருந்து பாருங்கள்...” தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த பசவராஜ் பொம்மை!!!
அமைச்சரவை நடவடிக்கை குறித்து விவாதிக்க பாஜக மத்திய தலைமையை சந்திக்க விரைவில் புது டெல்லி செல்ல உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
டெல்லி பயணம்:
அமைச்சரவை குறித்து விவாதிக்க எப்போது டெல்லி செல்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் “ அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க நான் விரைவில் டெல்லிக்குச் செல்வேன்” என்று பதிலளித்துள்ளார்.
உயர்மட்ட தீர்மானம்:
அமைச்சரவையிலிருந்து இருந்து ராஜினாமா செய்த தலைவர்கள் கட்சித் தலைவர்களைச் சந்தித்ததாகக் கூறப்படுவது உண்மையா என்ற கேள்விக்கு ”யூகக் கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது... அனைவரும் முயற்சி செய்கிறார்கள், ஆனால் இறுதியாக அதை உயர்மட்டத்தில் இருப்பவர்கள் தீர்மானிக்கிறார்கள்." என்று பதிலளித்தார் பசவராஜ் பொம்மை.
அமைச்சரவை மாற்றம்:
அமைச்சரவை விரிவாக்கமா அல்லது மாற்றமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக, அமைச்சரவைப் விரிவாக்கம் குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசிக்க இந்த வாரம் புது டெல்லிக்குச் செல்வதாக பொம்மை கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.