
குஜராத் மாநிலம் பாவ்நகரில் நடைபெற்ற பேரணியில் பேசிய கெஜ்ரிவால், ”ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், பல்வேறு சமூகங்கள், குழுக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிராக கடந்த 27 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான அரசில் பதிவு செய்யப்பட்ட அனைத்து 'பொய் வழக்குகளுக்கும்' முன்னுரிமை அளிக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.
குஜராத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை மறைமுகமாகத் விமர்சித்த கெஜ்ரிவால், ”அவ்வளவு பெரிய தொகுப்பை தன்னால் அறிவிக்க முடியாது. ஆனால் 'உத்தரவாதம்' மூலம் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரூ. 30,000 மதிப்பிலான உதவி அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கெஜ்ரிவால், குஜராத்தில் ’இரட்டை இயந்திர அரசாங்கம் நடைபெறுகிறது என்கிறார்கள். இந்த முறை குஜராத்தில் இரட்டை இன்ஜின் வேண்டாம், 'புதிய இன்ஜின்' வேண்டும். இரட்டை இயந்திரம் மிகவும் பழமையானது. இரண்டு இயந்திரங்களும் 40-50 ஆண்டுகள் பழமையானவை. புதிய கட்சி, புதிய முகங்கள், புதிய சித்தாந்தம், புதிய ஆற்றல் மற்றும் புதிய விடியல் ஆகியவற்றிற்காக புதிய கட்சியை முயற்சிக்கவும். இந்த முயற்சியில் நீங்கள் எதையும் இழக்க மாட்டீர்கள்.” எனப் பேசியுள்ளார்.