மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு !!!

மேற்கு வங்கத்தில்தடுப்பூசி செலுத்திய ஊழியர்களை கொண்டு, உணவு விடுதிகள் 3 மணி நேரம் செயல்பட அனுமதி அளித்துள்ளார் முதல்வர் மம்தா.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு !!!
Published on
Updated on
1 min read

கொரோனாவின் தாக்கம் காரணமாக மேற்கு வங்கத்தில் வருகிற 15ந் தேதி வரை முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மாநில மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பல்வேறு அறிவிப்புகளையும் மம்தா அறிவித்துள்ளார்.

இதற்கிடையே நேற்று நடைப்பெற்ற ஆலோசானை கூட்டத்தொடரில் தொடரில் பல்வேறு வர்த்தக அமைப்பு பிரதிநிதிகளுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில்  "இதுவரை மாநிலத்தில் 1.4 கோடி இலவச கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாகவும், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக  குறைந்துவருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு ஒன்று அறிவித்துள்ளார். 

மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களுடன் உணவு விடுதிகள் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளார்.  முழுஊரடங்கு முடிந்தவுடன் 25 சதவீத ஊழியர்களுடன் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிப்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்களின் மாநில மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள உதவ வேண்டும்.. ஏனென்றால், ஒட்டுமொத்த மக்களுக்கும் மாநில அரசே தடுப்பூசி போட முடியாது. இத்தகைய பணிகளுக்காக வர்த்தக நிறுவனங்களும் உதவி செய்ய முன்வர வேண்டும்" என்ற கோரிக்கையை அவர் வைத்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com