கடுமையாக உயர்ந்த கோதுமை விலை.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தடை - மத்திய அரசு உத்தரவு

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடுமையாக உயர்ந்த கோதுமை விலை.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தடை -  மத்திய அரசு உத்தரவு
Published on: 
Updated on: 
1 min read

இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், கோதுமையின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கோதுமை கையிருப்பு குறைந்தது. இதையடுத்து கோதுமையின் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.

ரஷ்யா -உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து 70 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது.

இதனால் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் கோதுமையின் விலை கிலோவுக்கு 32.38 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனிடையே கோதுமை விலை உயர்வு உணவு விலை மற்றும் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அனைத்து வகையான கோதுமை ஏற்றுமதிக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிற நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கு கோதுமை தேவை இருந்தால் அரசு அனுமதியோடு கோதுமை ஏற்றுமதி செய்ப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com