சுற்றி 50 பெண்கள் இருந்தா, நீங்களும் மயங்கி தான் விழுவீங்க... பாவம் அந்த பையன்!!!

சுற்றி 50 பெண்கள் இருந்தா, நீங்களும் மயங்கி தான் விழுவீங்க... பாவம் அந்த பையன்!!!
Published on
Updated on
1 min read

பீகார் | எப்போதுமே ஆண்கள் என்றால் பெண்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும் என்று தான் ஆசை படுவார்கள் என்பது ஒரு பறந்த மனப்பான்மை உண்டு. ஆனால், அந்த எண்ணங்களை எல்லாம் துகளாக்கும் வகையில், ஒரு மாணவன் இன்று தலைப்பு செய்திகள் ஆகி இருக்கிறார்.

கல்விக்கு உலகளவில் பெரும் இடம் பிடித்த நாலந்தா பல்கலைக்கழகம் இருந்த பீகாரின் நாலந்தாவில், மணி ஷங்கர் என்ற மாணவர் தான் அந்த தலைப்பு செய்திகள் ஆனவர்.

பீகார் ஷரீஃப் அல்லமா இக்பால் கல்லூரியில் படித்து வரும் மாணவரான மணி, பிரில்லியண்ட் பள்ளியில் இடைநிலை தேர்வு எழுதுவதற்காக வந்தார். ஆனால், உள்ளே வந்த மணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

தன்னைச் சுற்றி 50 பெண்கள் நிரைந்த வகுப்பில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை பற்றி தெரிந்த மணி தனது நிலை தடுமாறி பதற ஆரம்பித்தார். கை கால்கள் நடுங்க, வியர்வையில் மூழ்கி, உடல் சிவந்து மயங்கியே விழுந்து விட்டார்.

அவர் மயங்கியதும் பயந்து போன நிர்வாகத்தினர் மாணவனை சதார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.

90’ஸ் கிட்சுக்கு தான் மற்ற பாலினத்தவருடன் பேசுவது கவலையாக இருக்கும் என பார்த்தால், 2கே கிட்சுக்கு மத்தியிலும் இப்படி ஓரு சம்பவம் சுவாரஸ்யமாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com