இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக யாருக்கு வாய்ப்பு?!!!

இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக யாருக்கு வாய்ப்பு?!!!
Published on
Updated on
1 min read

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித்தின் ஓய்விற்கு பிறகான நீதிபதியை தேர்ந்தெடுக்க வலியுறுத்தி மத்திய அரசு அவருக்கு  கடிதம் எழுதியுள்ளது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லலித்தின் பதவிக்காலம் நவம்பர் 8, 2022 அன்றுடன் முடிவடைகிறது. அவர் 74 நாட்கள் மட்டுமே இந்தப் பதவியில் இருப்பார். புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணியை தொடங்குமாறு தலைமை நீதிபதி லலித்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 

தலைமை நீதிபதி என்வி ராமனின் பதவிக்காலம் முடிந்த பிறகு 26 ஆகஸ்ட் 2022 அன்று நாட்டின் 49வது தலைமை நீதிபதியாக நீதிபதி லலித், நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இரண்டரை மாதங்கள் மட்டுமே, அதே சமயம் அவரது முன்னாள் தலைமை நீதிபதியின் சராசரி பதவிக்காலம் 1.5 ஆண்டுகள். 

இந்த கடிதத்தை தலைமை நீதிபதி லலித்துக்கு மத்திய அரசு இன்று காலை அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின்படி, புதிய தலைமை நீதிபதியை பரிந்துரைக்க சட்ட அமைச்சர் தற்போதைய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட் வருவாரா?:
 
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, தலைமை நீதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். தற்போது நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மிகவும் மூத்தவராக இருப்பதால், அவர் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம். பாரம்பரியமாக, தலைமை நீதிபதி தனக்குப் பிறகு மூத்த நீதிபதியை அவரது ஓய்விற்கு பிறகு பரிந்துரைக்கிறார். நீதிபதி சந்திரசூட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டால் நாட்டின் 50 வது தலைமை நீதிபதியாக இருப்பார்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com