பதவி நீக்கம் செய்யப்படுவாரா மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!!!!காரணம் என்ன....?

பதவி நீக்கம் செய்யப்படுவாரா மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!!!!காரணம் என்ன....?
Published on
Updated on
1 min read

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ சங்கல்ப் அமோன்கர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்மிருதி மீதான குற்றசாட்டுகள்:

ஸ்மிருதி இரானி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த மனுவில் அவர்து பட்டப்படிப்பு தொடர்பாக பொய் கூறியிருந்தார் என கூறியுள்ளார் அமோன்கர்.  அதனைத் தொடர்ந்து தற்போது கோவாவில் ஸ்மிருதியும் அவரது மகளும் இணைந்து நடத்தி வரும் ’சில்லி சோல்ஸ் கஃபே & பார்’ மீதான பதிவு ஆவண்ங்கள் குறித்தும் பொய் கூறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார் அமோன்கர்.  சட்டவிரோதமாக ’சில்லி சோல்ஸ் கஃபே & பார்’ஐ நடத்தி வருவதாகவும் இந்த முழு வணிகமும் பினாமி முறையில் நடத்தப்படுவதாக சந்தேகிப்பதாகவும் அமோன்கர் கூறியுள்ளார்.  

இந்த விவகாரத்தில் சட்ட விரோதமாக உரிமம் வழங்குவதும், பல்வேறு சட்டங்களை மீறி உணவகம் கட்டப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ அமோன்கர் தெரிவித்துள்ளார்.  மேலும் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி நடபெறுவதால் ஸ்மிருதி மீதான குற்றசாட்டுகளை மறைப்பதற்கான முயற்சிகள் மட்டுமே நடப்பதாகவும் கூறியுள்ளார்.

வேண்டும் நியாயமான விசாரணை:

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருது இரானியை காப்பாற்ற்வதற்கான வழிமுறைகளை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் அமோன்கர்.  சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் வகையில் ஸ்மிருதி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நீக்கப்படுவாரா ஸ்மிருதி:

அமைச்சரவையிலிருந்து ஸ்மிருதி நீக்கப்பட்டு நியாயமான முறையில் விசாரணை நடைபெற வெண்டும் எனவும் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் மீண்டும் அவரைஅமைச்சரவைக் குழுவில் இணைத்துக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார் அமோன்கர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com