”டெல்லியின் ஆதரவு இல்லாமல்.....” சஞ்சய் ராவத்!!

”டெல்லியின் ஆதரவு இல்லாமல்.....” சஞ்சய் ராவத்!!
Published on: 
Updated on: 
1 min read

தாக்கரே பிரிவு தலைவர் சஞ்சய் ராவத், சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்து மத்திய அரசை தொடர்ந்து தாக்கி பேசி வருகிறார். இம்முறை மகாராஷ்டிரா-கர்நாடகா எல்லைப் பிரச்சனை தொடர்பாக மோடி அரசை குறிவைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையே அதிகரித்து வரும் எல்லைப் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசை உத்தவ் தாக்கரே குழுவின் தலைவர் சஞ்சய் ராவத் இன்று கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியின் ஆதரவு இல்லாமல் எல்லையில் வன்முறை சம்பவங்கள் நடக்காது என்று கூறியுள்ளார் ராவத்.  

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவையும் ராவத் தாக்கி பேசியுள்ளார்.  மேலும் இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்வதில் மாநிலம் பலவீனமாக இருப்பதாகத் தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com