கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு... 23 ஆக அதிகரிப்பு...

கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு... 23 ஆக அதிகரிப்பு...
Published on
Updated on
1 min read

கேரளாவில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த மாதம் சிகிசைக்கு வந்த 24 வயதான கர்ப்பிணி பெண்ணுக்கு காய்ச்சல், தலைவலி, தோலில் தடிப்புகள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அப்பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் ஏற்கெனவே மொத்தம் 19 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது மேலும் 4 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 16 வயது இளம் பெண் உள்பட 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com