கேரள மாநிலத்தின் முதல்வராக இடதுசாரி தலைவர் பினராயி விஜயன் இன்று மீண்டும் பதவியேற்றார்

Published on
Updated on
1 min read

கேரள மாநிலத்தின் முதல்வராக இடதுசாரி தலைவர் பினராயி விஜயன் இன்று மீண்டும் பதவியேற்றார்.

கேரளாவில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிதாக பதவி ஏற்க இருக்கும் அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன. புதிய அமைச்சரவையில் 8 இளைஞர்களுக்கு

இந்த நிலையில் திருவனந்தபுரம் மத்திய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பினராயி விஜயன் மீண்டும் கேரள முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமதுகான் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.இதைத்தொடர்ந்து 21 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க 500 நபர்களுக்கு அனுமதியளிக் கப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்ற அனைவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் காண்பித்த பின்னரே விழா அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த பதவி ஏற்பு விழாவில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com