துணை முதலமைச்சர் உதயநிதிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலடி

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்திவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலடி
Published on
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதான் நினைவு தினம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 9.30 மணி அளவில் இருந்து 11 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கு அனுமதியும் பாதுகாப்பு உள்ளிட்ட சட்ட ரீதியான அனுமதி வழங்க கோரி மனு அளித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். டிசம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை உறுதிமொழி உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு வழங்க வேண்டி மனு கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

நம் தவறு செய்தால் உடனடியாக காவல்துறையினர் நீதிமன்றம் மூலமாக நமக்கு தண்டனை கொடுப்பார்கள் என்ற எண்ணம் தற்பொழுது இல்லை. அதனால் அதிக குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கரையான் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.

அதிமுகவில் கலவர கூட்டம் தான் நடக்கிறது என்ற உதயநிதி பேச்சு குறித்தான கேள்விக்கு இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் அவரை பேசக்கூடாது என பார்க்கிறேன். அவர்களுக்கு என்ன யோகிதை இருக்கிறது இதைப் பற்றி பேச எனவும் பணத்தை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை, அதிமுகவை தேடி தான் கூட்டணிக்கு வருவார்கள், ஜெயிக்கும் குதிரையில் தான் பந்தயம் கட்டுவார்கள் என்றும் எனவும் தெரிவித்தார்.

அதிமுகவில் பூசல் இருக்கிறது அதன் வெளிப்பாடாக திண்டுக்கல் சீனிவாசன் பேசி இருக்கிறார்.அதன் பிறகு அவரே இதனை மறுத்தும் இருக்கிறார்.அதானி விவகாரத்தில் திமுக ஏன் மௌனம் காக்கிறது. திமுகவிற்கு மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.மீனவர்கள் பிரச்சனை இப்படி போன்ற பல பிரச்சனைகளை பற்றி திமுக பேசவில்லை என கூறினார்.

அதிமுகாவில் யாரும் பிரிந்து செல்லவில்லை பொதுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.அவர்களுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை.சசிகலா ஓபிஎஸ் டிடிவி மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களை தவிர மற்றவர்களை கட்சியில் சேர்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com