தமிழக அரசுக்கு 1 லட்சம் அபராதம் - தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கலில் காலதாமதம் காரணத்திற்கு

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வுதியபலன்கள் வழங்கும் உத்தரவுக்கு எதிராக காலதாமதமாக மேல் முறையீடு செய்த தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசுக்கு 1 லட்சம்  அபராதம் - தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கலில் காலதாமதம் காரணத்திற்கு
Published on
Updated on
1 min read

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடைச்சேர்ந்த லட்சுமணன் அரசு பள்ளியில் தூய்மைப்பணியாளராக கடந்த 1992 ஆம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படியில் சேர்ந்தார். பின்னர் அவரது பணி 2002-ம் ஆண்டு நிரந்தரமாக்கப்பட்டு 2012, ஓய்வு பெற்றார். அவருக்கான ஓய்வுதிய பலன்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2020 ஆண்டு உத்தரவிட்டது அதற்கு எதிராக மறு ஆய்வு மனுவும் 2022-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேல்முறையீடு மனு

அந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் உச்சநீதிமன்றம் மேலறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது அந்தமனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி ரிசிகேஸ்ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள் ஓய்வுதிய பலன்கலை அளிக்க உயர்நீதிமன்றம் 2020 ஆண்டு உத்தரவிட்டுல்ளது. ஆனால் மேல்முறையீட்டு மனு 156 நாட்கள் கழித்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது . காலதாமதத்துக்காக கூறப்பட்ட சட்ட கருத்து மொழியாக்கம் போன்ற காரணங்களால் ஏற்புடையவையாக இல்லை.  மேலும் ஓய்வூதிய பலன்கள் தொடர்பாக தூய்மைபணியாளரை மேலும் வழக்காட செய்வது தேவையற்றதுஎன கருத்டி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறோம் இந்த அபராத தொகையை மட்டும் உச்சநீதிமன்ற பணியாளர் நல்நிதிக்கு 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்.

 காலதாமதமாக மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்ததற்கு காரணமான அலுவர்லகளிடமிருந்து இந்த அபராதத்தொகையை தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறை வசூலித்துகொள்ளலாம் என தெரிவித்தனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com