"வரவு வைக்கப்பட்டது மாணவர்களுக்கான ரூ. 1000!" தமிழக முதல்வரின் 'அடுத்த நகர்வு' என்ன?

தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களுக்கு கீழ் வழங்கப்பட்ட ரூ. 1000 தற்போது தவெக ஆட்சியிலும் வழங்கப்பட்டுள்ளது.
₹1000 Student Aid
₹1000 Student Aid₹1000 Student Aid
Published on
Updated on
1 min read

சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து தவெக 108 இடங்களை வென்று வெற்றிபெற்றது. மேலும், ஆட்சியமைக்க அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில் விசிக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் நிபந்தனை இன்றி வெளியில் இருந்து ஆதரவு தருவதாகவும், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக-விற்கு ஆதரவு கொடுத்துள்ளது. இதனையடுத்து 120 இடங்களை வென்று தமிழக முதல்வரை பொறுப்பில் அமர்ந்தார். அதன்பின்பு, நேற்றைய தினம் (மே 14) நம்பிக்கை வாங்கெடுப்பு சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் 144 MLA-க்கள் ஆதரவு பெற்று ஆட்சியை பிடித்தது தவெக.

இதில் திமுக தனது நிலைப்பாட்டினைக் கூறாமல் வெளிநடப்பு செய்தது. மேலும், திமுக-வின் நல்ல திட்டங்களை தொடருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து தவெக தலைவர் மற்றும் முதல்வருமான விஜய் அத்தகைய நன்மை பயக்கும் திட்டங்கள் தொடரும் என்று கூறினார். தற்போது, இன்று காலை (மே 13) மாணவர்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. மேலும், வழக்கம் போல் அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளியில் பயின்று கல்லூரிக்கு சென்றுள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வருமா? என்று நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வியெழுப்பிய நிலையில் தற்போது மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்கள் தொடரும் என்று முதல்வர் ஜோசப் விஜய் கூறியதை அடுத்து கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களுக்கு கீழ் வழங்கப்பட்ட ரூ. 1000 தற்போது தவெக ஆட்சியிலும் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாகவே, புதிதாக ஆட்சிக்கு வரும் கட்சி தங்களின் திட்டங்களை செயல்படுத்த முனைப்பாக இருந்து வரும் நிலையில் தற்போது தவெக முதல்வர் கடந்த ஆட்சியில் இருந்த திட்டங்களை தொடர்வது பலராலும் ஒரு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. மேலும், இது பலராலும் வரவேற்கத்தக்க ஒன்றாகவே இருக்கிறது. இதனையடுத்து முதல்வர் விஜய் அடுத்தடுத்து என்ன திட்டங்களை தொடரப்போகிறார்? அல்லது புதிய திட்டங்களை அறிமுகம் செய்வாரா? பெண்களுக்கு ரூ.1000 வரவு வைக்கப்படுமா? அல்லது ரூ.2500 வரவு வைக்கப்படுமா? என்ற பல எதிர்பார்ப்புகளை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com