10,000 பணியிடத்தை நிரப்ப வேண்டும்; அதுதான் முதல்வர் டிஐஜிக்கு செய்யும் மரியாதை..!” -அண்ணாமலை.

10,000 பணியிடத்தை நிரப்ப வேண்டும்; அதுதான்  முதல்வர் டிஐஜிக்கு செய்யும் மரியாதை..!” -அண்ணாமலை.
Published on
Updated on
2 min read

முதல்வர் டிஐஜிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றால் போர்க்கால அடிப்படையில் 10,000 பணியிடத்தை நிரப்ப வேண்டும் என பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து பேசுகையில் அவர் தெரிவித்ததாவது:-

காவல்துறையில் அடிமட்டத்தில் மன அழுத்தம் உச்சகட்டம். இப்பொழுது உயர் அதிகாரிகளின் அழுத்தம்; பின்  அட்மினிஸ்ட்ரேஷன் அழுத்தம். காவல்துறையை சீரமைக்க வேண்டும். இதில் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும். 

பத்தாயிரம் காலி பணியிடங்கள் தமிழகத்தில் உள்ளது. இதன்மூலம் பணி அழுத்தம் குறையும். முதல்வர் டிஐஜிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றால் போர்க்கால அடிப்படையில் 10,000 பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

சுப்ரீம் கோர்ட் 2006 இல் நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். பணியிடங்களில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். பந்தோபஸ்தில் காவல்துறையினருக்கு சிறுநீர் கழிக்க கூட வசதி இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை கொடுக்க வேண்டும்; காவல்துறையில் உள்ளவர்களுக்கு பிளாக் லீவு கொடுக்க வேண்டும்.” எனக் கோறிக்கை விடுத்தார்.

மேலும், தற்கொலையாக இருந்தாலும் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம்  வைத்து , உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் இதை விசாரணை செய்ய வேண்டும் என்றும், அவரின் தொலைபேசி பேச்சு, அவர் வழக்கு மேற்பார்வை என்ன? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும். தெரிவித்தார்.

அவர் மரணம் தொடர்பாக, முழுமையாக விசாரணை நடைபெறும் வரை தெரிவிக்க முடியாது.
டிஐஜி, ஐஜி ரேங்கில் என்ன மன அழுத்தம் இருக்கும்?  எனக்கு அனுபவம் உள்ளது. வீக்கானவர்கள் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.  எனவே, இதன் தூண்டுதல் என்ன என்பதை விசாரிக்க வேண்டும். இறந்த  குடும்பத்தின் வாரிசுக்கு குரூப் ஏ அரசு வேலை கொடுக்க வேண்டும்.

வாக்கிங் சென்றவர் ஹோம் ஆபீஸ் சென்று பின்னர் தற்கொலை செய்தது இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தற்கொலை தூண்டப்பட்டது மன அழுத்தம் உள்ள காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்”, எனவும் கோரினார்.

இதையடுத்து,  ஏடிஜிபி அரசியல் ஆக்க வேண்டாம் என பேட்டியளித்ததற்கு  கருத்து தெரிவித்த அண்ணாமலை பேசும் போது:-

டிஐஜி எனது சீனியர்,   ஏடிஜிபி இறந்த மனிதரை கொச்சைப்படுத்துவது நன்றாக இல்லை. 
இறந்து போனவர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுவரை தமிழகத்தில் நடக்காத விஷயம் இவர் தற்கொலை. அதுவும் கோவையில் நடந்துள்ளது. முறையாக விசாரிக்கப்பட வேண்டும். 

காவல்துறை நலத்திற்கு மாநில அரசு கவனம் கொடுக்க வேண்டும். மன அழுத்தம் உள்ளிட்ட எல்லா பிரிவையும் பார்க்க வேண்டும். காவல்துறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். மக்கள் கொதித்துள்ளனர். குடும்பத்தின் தனி உரிமையை பாதிக்கப்படாதவாறு அதிகாரி பேச வேண்டும். இது குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனக் குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com