தமிழ்நாடு காவல்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியீடு..!

தமிழ்நாடு காவல்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியீடு..!
Published on
Updated on
1 min read

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கான சட்ட விவரங்களில் உதவ சட்ட ஆலோசகர் பணியிடம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையில் 101 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில், 250 காவல்நிலையங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும், காவலர்களுக்கான சீருடைப் படி 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக சென்னை மாநகரில் 3 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் ஐந்து இடங்களில் புதிய தாலுகா காவல் நிலையங்களும், மூன்று புதிய பெருநகர காவல் நிலையங்களும் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

காவலர்கள் ஐந்து பேர் தங்கும் மகளிர் விடுதி சிந்தாதிரிப்பேட்டையில் கட்டப்படும் என்றும், காவலர் மருத்துவமனை வசதி ஊர்க்காவல் படையினருக்கும் விரிவு படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கான சட்ட விவரங்களில் உதவ சட்ட ஆலோசகர் பணியிடம் உருவாக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை பணியாளர்களுக்கு காப்பீடு இடர் பாதுகாப்புத் தொகை உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com