தவெக வேட்பாளர்களிடம் தோல்வியை தழுவிய 11 திமுக அமைச்சர்கள்.. தொகுதி வாரியாக முழு விவரம்!

திமுக சார்பில் போட்டியிட்ட துரைமுருகன் 7,643 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்
TVK candidates won
vijay - MK stalin
Published on
Updated on
3 min read

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகள் தமிழக வெற்றி கலக்கம் வெற்றி பெற்ற நிலையில் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட பல திமுக அமைச்சர்கள் வெற்றி வாய்ப்பை இழந்து தோல்வியடைந்துள்ளனர். ஆளும் கட்சியில் அமைச்சர்களாக பதிவாகிக்கும் வேட்பாளர்களே தோல்வியடைந்துள்ள சம்பவம் அக்கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

துரைமுருகன்

காட்பாடியை திமுகவின் கோட்டையாக வைத்திருந்தவர் திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன். இவர் திமுகவின் பொது செயலராகவும், சட்டமன்ற அமைச்சராகவும் இருக்கும் நிலையில் மீண்டும் இந்த தேர்தலில் காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில் இதே தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட சுதாகர் 69,868 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ராமு 63,998 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பெற்றுள்ளார். எனவே திமுக சார்பில் போட்டியிட்ட துரைமுருகன் 7,643 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

திராவிட முன்னேற்ற கழகம் துரைமுருகன் - 62,225. தமிழக வெற்றி கழகம் சுதாகர் - 69,868. 

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

உதயநிதி ஸ்டாலினின் நண்பரும், கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்தமுறை திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அதே தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளரான நவல்பட்டு விஜி என்பவரிடம் 8,705 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகம் அன்பில் மகேஷ் - 81132. தமிழக வெற்றி கழகம் நவல்பட்டு விஜி - 89,837.

டி.ஆர். பி ராஜா

திமுகவின் மூத்த தலைவரான டி.ஆர். பாலுவின் மகனும், வணிகத்துறை அமைச்சருமான டி.ஆர். பி ராஜா மீண்டும் மன்னர் குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நிலையில், அதே தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் காமராஜ் என்பவரிடம் 1,566 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

திராவிட முன்னேற்ற கழகம் டி.ஆர். பி ராஜா - 66,850. அதிமுக காமராஜ் - 68,416

மூர்த்தி

திராவிட முன்னேற்ற கழகத்தின் தமிழ்நாடு வணிக வரி துறை அமைச்சராக பதவி வகித்து வரும் மூர்த்தி, இந்த முறை மீண்டும் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக தமிழக வெற்றி கழக வேட்பாளர் கார்த்திகேயன் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், 16,547 வாக்குகள் வித்தியாசத்தில் மூர்த்தி தோல்வியடைந்தார்.

திராவிட முன்னேற்ற கழகம் மூர்த்தி - 1,18,777. தமிழக வெற்றி கழகம் கார்த்திகேயன் - 1,02,230.

கீதா ஜீவன்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சராக பதவி வகித்து வரும் கீதா ஜீவன், இந்த முறை மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக தமிழக வெற்றி கழக வேட்பாளரும் விஜய்யின் நண்பருமான ஸ்ரீநாத் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், 37,731 வாக்குகள் வித்தியாசத்தில் கீதா ஜீவன் தோல்வியடைந்தார்.

திராவிட முன்னேற்ற கழகம் கீதா ஜீவன் - 62,805. தமிழக வெற்றி கழகம் ஸ்ரீநாத் - 1,0,0536.

தா.மோ.அன்பரசன்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தமிழ்நாடு சிறு குறு தொழில் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் தா.மோ.அன்பரசன், இந்த முறை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஹரிஷ் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், 29,609 வாக்குகள் வித்தியாசத்தில் அன்பரசன் தோல்வியடைந்தார்.

திராவிட முன்னேற்ற கழகம் தா.மோ.அன்பரசன் - 82,596. தமிழக வெற்றி கழகம் ஹரிஷ் - 1,12,205.

ஆர். காந்தி

திராவிட முன்னேற்ற கழகத்தின் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் ஆர். காந்தி, இந்த முறை மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக தமிழக வெற்றி கழக வேட்பாளர் தாஹிரா போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர். காந்தி தோல்வியடைந்தார்.

திராவிட முன்னேற்ற கழகம் ஆர்.காந்தி - 85,362. தமிழக வெற்றி கழகம் தாஹிரா - 91,149.

ஆர். ராஜேந்திரன்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் ஆர். ராஜேந்திரன் மீண்டும் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக தமிழக வெற்றி கழக வேட்பாளர் சிவகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், 14,034 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர். ராஜேந்திரன் தோல்வியடைந்தார்.

திராவிட முன்னேற்ற கழகம் ஆர். ராஜேந்திரன் - 71,676. தமிழக வெற்றி கழகம் சிவகுமார் - 85,710.

சு. முத்துசாமி

திராவிட முன்னேற்ற கழகத்தின் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் முத்துசாமி, மீண்டும் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆனந்த் மோகன் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், 22,250 வாக்குகள் வித்தியாசத்தில் முத்துசாமி தோல்வியடைந்தார்.

திராவிட முன்னேற்ற கழகம் முத்துசாமி - 74,586. தமிழக வெற்றி கழகம் ஆனந்த் மோகன் - 96,836.

மதிவேந்தன்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் மதிவேந்தன் மீண்டும் இந்த தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில் இதே தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட லோகேஷ் தமிழ்செல்வன் 74,808 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பிரேம்குமார் 60,297 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பெற்றுள்ளார். எனவே திமுக சார்பில் போட்டியிட்ட மதிவேந்தன் 16,954 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

திராவிட முன்னேற்ற கழகம் மதிவேந்தன் - 57,854. தமிழக வெற்றி கழகம் லோகேஷ் தமிழ்ச்செல்வன் - 74,808.

பெரியகருப்பன்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சராக பதவி வகித்து வரும் பெரியகருப்பன் மீண்டும் இந்த தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெரியகருப்பன் தோல்வியடைந்தார்.

திராவிட முன்னேற்ற கழகம் பெரியகருப்பன் - 83,375. தமிழக வெற்றி கழகம் ஸ்ரீனிவாச சேதுபதி - 83,376.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com