190 பயனாளிகளுக்கு ரூ.11.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் செஞ்சிமஸ்தான் நேரில் வழங்கினார்

செஞ்சியில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் செஞ்சிமஸ்தான் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
190 பயனாளிகளுக்கு ரூ.11.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் செஞ்சிமஸ்தான் நேரில் வழங்கினார்
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 190 பயனாளிகளுக்கு 11 லட்சத்து, 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com