11- ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 92% -பேர் தேர்ச்சி! மாணவிகள் அசத்தல்!

8,07,098 -பேர் இந்த தேர்வினை சந்தித்தனர். இதில் மாணவியரின் எண்ணிக்கை 4,27,610. மாணவரின் எண்ணிக்கை 3,82,488.
11th board exam
11th board exam
Published on
Updated on
1 min read

2024-25-ம் கல்வி ஆண்டுக்கான 10, 11 -ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை இன்று காலை 9 மணியளவில் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவித்த பின்னர் 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவித்தார். 5.03.25 முதல் 27.03.2025 வரை மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுகள் நடைபெற்றன.

8,07,098 -பேர் இந்த தேர்வினை சந்தித்தனர். இதில் மாணவியரின் எண்ணிக்கை 4,27,610. மாணவரின் எண்ணிக்கை 3,82,488.

இந்த தேர்வில் 7,43,232 -பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது தமிழ்நாட்டில் 92.09% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவிகள் 4,03,949 (95.13%) பேரும் மாணவர்களில் 3,39,283 (88.70%%) பெரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.11 -ஆம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவியரே அதிக தேர்ச்சியை அடைந்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com