வெளியானது 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்...முதலிடம் பிடித்த மாவட்டம் எது...?

வெளியானது 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்...முதலிடம் பிடித்த மாவட்டம் எது...?

Published on

11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90 புள்ளி 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற்றது. 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். இதில், 90 புள்ளி 94 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில், தேர்ச்சி விகிதத்தில், இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, பூஜியம் புள்ளி 86 சதவீதம் அதிகரித்துள்ளது.. 

இதில் மாணவியர் 94 புள்ளி 36 சதவீதமும், மாணவர்கள் 86 புள்ளி 99 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர்களைவிட மாணவிகள் 7 புள்ளி 37 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி விகிதத்தில் 96 புள்ளி 38 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தையும், 96 புள்ள 18 சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2-ஆம் இடத்தையும், 95 புள்ளி 73 சதவீதம் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது.  

அரசு பள்ளிகள் 84 புள்ளி 97 சதவீதம், அரசு உதவி பெறும் பள்ளிகள் 93 புள்ளி 20 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97 புள்ளி 69 சதவீதமும், மாற்றுத் திறனாளி மாணவர்கள் 5 ஆயிரத்து709 பேரில், 5 ஆயிரத்து 80 பேரும், சிறைக் கைதிகள் 125 பேரில் 108 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேரும்,  ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 எடுத்து மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com