தமிழகத்தில் 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது!!

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி துறை ஒதுக்கீடு மற்றும் பொது ஒதுக்கீடு பிரிவினருக்கு...
si exam
si exam
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 1,299 எஸ்ஐ பணியிடங்களுக்கு தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில்1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளனர்.

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் எஸ்.ஐ பணியிடங்களை நிரப்ப கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. இதற்கான எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி துறை ஒதுக்கீடு மற்றும் பொது ஒதுக்கீடு பிரிவினருக்கு ஒரே தேர்வாக நடத்தப்பட்டது. இதன்படி, தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 46 மையங் களில், 145 இடங்களில் தேர்வு நடைபெற்றது.

1 லட்சத்து 78,390 பேருக்குதேர்வுக் கூட நுழைவுச் சீட்டு வழங்கப் பட்டது. அதில் 30 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதன்மை தேர்வும், மாலை 3.30 மணிமுதல்5.10 -வரை தமிழ் தகுதித்தேர்வும் நடை பெற்றது. இந்த முறை தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன. அதன்படி மதிய உணவுக்காக தேர்வர்கள் வெளியே செல்ல அனுமதிக் கப்படவில்லை. இந்தத் தேர்வில் காவல் துறையில் பணியாற்று வோருக்கு 260 இடங்கள் (20%) ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னையில் 9 மையங்களில் 22 இடங்களில் தேர்வு நடை பெற்றது. விண்ணப்பதாரர்கள் காலை 8 மணி முதலே வரத் தொடங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஒருவர் பின்ஒருவராக பல்வேறு கட்ட சோத னைக்கு பிறகு அனுமதிக்கப் பட்டனர். மின்னணு சாதனங் களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லவும் முழுக்கை சட்டையை மடக்கி வைக்கவும், பெல்ட் அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

சென்னையில் சுமார் 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2,600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வுக் கான ஏற்பாடுகளை சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய அதி காரிகள், அந்தந்த மாநகர காவல் ஆணையர்கள், எஸ்பி-க்கள் ஆய்வு செய்தனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com