
திருத்தணி ஆகூர் ஊராட்சியை சேர்ந்தவர் மது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது (13). இந்த சிறுமி அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே போல முகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 14 வயதுடைய சிறுவன் கே.ஜி கண்டிகை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஒரே ஊரை சேர்ந்த உறவினர்களான மது மற்றும் முகேஷும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.பள்ளி முடிந்ததும் இருவரும் தனியாக சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இருவரும் நெருங்கி பழகிய நிலையில் சிறுமி கடந்த நவம்பர் மாதம் கர்ப்பமடைந்துள்ளார்.
மேலும் அந்த சிறுமி தான் கர்ப்பமாக இருப்பதை வீட்டில் மறைத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே சிறுமியின் உடல்நிலை சரியில்லாததை கவனித்த தாய்,நேற்று மதுவிடம் “உடம்பு எதாவது சரியில்லையா? உன் வயிறு ஏன் பெருசா இருக்கு வயிறு வலிக்குதா?” என கேட்டு சிறுமியை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி படுத்தியுள்ளனர். இது குறித்து மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் சிறுமியிடம் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக சமூக நலத்துறை அதிகாரிகள் முன்பு விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து போலீசார், அந்த 14 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 13 வயது சிறுமியை 14 வயது சிறுவன் கர்பமாக்கியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்