விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை தேதியை செப்டம்பர் 17-ல் இருந்து 18-ஆக மாற்றி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொதுவாக ஆவணி மாதம் வரும் அமாவாசையில் இருந்து, 4-வது நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னையில் செப்டம்பர் 18-ம் தேதி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : நிலவில் சல்பர், பிளாஸ்மா இருப்பதை உறுதி செய்த ரோவர்...!
ஆனால், செப்டம்பர் 17-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. எனவே விடுமுறையை மாற்றி அறிவிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விடுமுறை செப்டம்பர் 17 என்ற அரசாணையை ரத்து செய்துவிட்டு, செப்டம்பர் 18-ம் தேதி விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.