சென்னையில் 2 நாள் வேளாண் திருவிழா; இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

சென்னையில் 2 நாள் வேளாண் திருவிழா; இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!
Published on
Updated on
1 min read

இன்றும் நாளையும் சென்னையில் நடக்கும் வேளாண் திருவிழாவை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் 2 நாள் நடைபெறும் வேளாண் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க இருக்கிறார். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் வேளாண் திருவிழா நடத்த தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்த உள்ளனர். வேளாண் விளைபொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் இத்திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதற்கா 100க்கும் மேற்பட்ட அங்காடிகள் அமைக்கபட்டுள்ளன.

இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். வேளாண் பெருமக்களை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த திருவிழாவை காண பொதுமக்களுக்கு கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com