
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் கிராமத்தில் இறால் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென பாய்லர் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருண் ஓரான், பல்ஜித் ஓரான் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சீர்காழி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.