
நெல்லை டவுண் செல்லும் சாலையில் உள்ளது சாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி, இந்த பள்ளியில் இன்று காலை இடைவெளி விடப்பட்ட நேரத்தில் மாணவர்கள் கழிப்பறை சென்றுள்ளனர்,
அப்போது பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து உள்ளது. இதில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால் அப்பள்ளி மாணவர்கள் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.