
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது. இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது.
இந்த சூழலில்தான் ரங்கராஜ் பாண்டே தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் 2026 தேர்தல் களம் யாருக்கு சாதகமா உள்ளது என்பதை பற்றிய தனது தனிப்பட்ட கணிப்பை தெரிவித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது,
“தற்போது உள்ள நிலவரத்தின்படி 2016 தேர்தலுக்கு எதிர் நிலையான ஒரு சூழல் அதாவது 2016 அதிமுக ஆட்சி அமைத்தது ஆனால் திமுக மிகவும் பலம் பொருந்திய ஒரு எதிர்க்கட்சி உருவெடுத்தது. அப்போது 90 சீட்டுகள் அவர்களிடமிருந்தன. ஆனாலும் அதிமுக ஆட்சி அமைத்தது. இம்முறை அதற்கான சாத்திய கூறுகள் மிக குறைவு. இன்று சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடந்தால் இன்றைய கள நிலவரத்தின்படி திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான சூழல் உள்ளது.
இன்று தமிழ்நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் மட்டும் இல்லை. நிறைய சிறு சிறு கட்சிகள் உருவாகியுள்ளன. தற்போது புதிதாக விஜயும் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கியுள்ளார். ஆனால் அவர் இன்னும் தேர்தலில் போட்டியிடவில்லை. அவரின் பலம் இன்னும் பரிசோதிக்கப்படவில்லனில். அவர் 15 சதவீத வாக்குகள் பெறலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு இருக்கும் நட்சத்திர முகம் முற்றிலும் மாறுபட்டது. எடுத்துக்காட்டாக திருவல்லிக்கேணி தொகுதி திமுக கோட்டை என்று சொல்லலாம். ஒருவேளை இன்று உதயநிதி தேர்தலில் போட்டியிட்டார் நிச்சயமாக அவர்தான் வருவார். ஆனால் விஜய் போட்டியிட்டால் நிலைமை தலைகீழாக மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு இதுதான் இன்றைய களநிலவரம்.
நான் எடுத்துவைத்துள்ள analytics -ன் படி 95 தொகுதி எதிர்க்கட்சிகளுக்கும் 22 தொகுதி இழுபறியிலும் மற்ற அனைத்து தொகுதிகளும் திமுகவுக்கும் இருக்கிறது. இன்று தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் திமுக -வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். நீங்கள் இந்த analytics -ஐ 100% நம்பலாம்.
கூட்டணி மாறினால்..!
ஒருவேளை விஜய் அதிமுக வோடோ அல்லது நாம் தமிழரோடோ இணைந்தால் அந்த சூழல் முற்றிலும் வித்தியாசமானது இவர்களால் பெரும் தாக்கத்தை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்த இயலும்.
விஜய்யின் புகழ் வெளிச்சம் ஸ்டாலினை விட பெரியது. ஏனெனில் விஜய் இன்னமும் எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை அவர் மீது எந்த நெகட்டிவ் எண்ணமும் எதிர்மறையான எண்ணமும் மக்களிடையே உதிக்கவில்லை. தற்போது நான்கு முனை போட்டியாகத் தான் தேர்தல் களம் உருவெடுத்திருக்கிறது.
இம்முறை சீமான் விஜய் உடனோ அல்லது அதிமுக உடனோ நிச்சயம் சென்றாக வேண்டும். சீமானிடம் 8% வாக்குகள் உள்ளன. அதன் பலனை அவர் கூட்டணியில் இருந்தால் நிச்சயம் அனுபவிப்பார். இல்லையெனில் தனித்துதான் நிற்பேன் என அவர்கூறினால் அது அவருக்கு நிச்சயம் இறங்கு முகம்தான்.
மேலும் பேசிய அவர் திமுகவின் நிலைமை 2006ல் இருந்தது போல தான் இருக்கிறது திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு தான் 130 + இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது. எந்த கட்சி ஜெயிச்சாலும் பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசமும் இருக்கப்போவதில்லை. பெரும்பான்மை என்ற ஒன்று இருக்காது. மைனாரிட்டி அரசாங்கமாகத்தான் இது இருக்கும்.அது உறுதி என அவர் பேசியிருக்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.