கடலூர் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி 3 பசு மாடுகள்  பலி...!

கடலூர் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி 3 பசு மாடுகள் பலி...!

Published on

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கொரக்கை கிராமத்தை சேர்ந்த  ஈஸ்வரி மற்றும்  வள்ளி மற்றும்  அங்கம்மாள் ஆகியோருக்கு சொந்தமான மூன்று பசு மாடுகள் இருந்தன. இந்நிலையில், நேற்று மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள்  வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால்,  அங்கம்மாள் மற்றும் அவரது கணவர் கருப்பையா இருவரும், அதிகாலை மாடுகளை தேடிச் சென்றனர்.  

அப்போது கிராமத்தின் அருகில் உள்ள வயல் பகுதியில்  அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி மூன்று  மாடுகளும்  இறந்து கிடந்துள்ளன. மேலும் இரண்டு குரங்குகளும் மின்கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

இந்நிலையில்,  ஏற்கனவே அப்பகுதியில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதாக மின்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com