தமிழகத்தில் 3  ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
Published on

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிச்சாமிக்கு மீன்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.மீன்வளத் துறை ஆணையர் மற்றும் மேலாண் இயக்குனராக இருந்த கருணாகரன் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் பதவி வகித்த அதுல் ஆனந்த் தொழிலாளர் நல ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனர் சரவணனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com