பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு...!

பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு...!
Published on: 
Updated on: 
1 min read

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் உயிாிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளாா். 

விருதுநகர் மாரனேரியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் இடையன்குளத்தைச் சேர்ந்த தங்கவேலு மற்றும் கருப்பசாமி ஆகியோா் உயிாிழந்தனா். மேலும் இருவா் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 

இந்நிலையில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உயிாிழந்தவா்களின் குடும்பதினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும்,  காயமடைந்த இருவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளாா். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com