சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில், 2 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிவசங்கர் பாபாவின் பக்தையான சுஷ்மிதா என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் வழங்கப்பட்டது.