நெய்வேலி என்எல்சி நிறுவன இரண்டாவது சுரங்கத்தில் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 30 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் இன்று காலை முதலாவது பணிக்கு சுரங்கத்தின் க்ராவலர் யார்டுக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் பிக்கப் வாகனம் சுரங்கப் பகுதியில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் பயணம் செய்த 30 தொழிலாளர்கள் காயமடைந்தனர். உடன் அக்கம் பக்கத்தில் இருந்த சக தொழிலாளர்கள் விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் என்எல்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுரங்கப் பகுதிகளில் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படுவது அடிக்கடி நிகழ்ந்து வருவதாகவும், என்எல்சி நிறுவனம் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாதவாறு தொழிலாளர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க:8 வருடமாக 144 தடை உத்தரவில் இருந்த கிராமம்... நடந்தது என்ன?