தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாாிகள் பணியிட மாற்றம்...அரசு அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாாிகள் பணியிட மாற்றம்...அரசு அதிரடி உத்தரவு!
Published on: 
Updated on: 
2 min read

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 33 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 33 பேரை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஸ்ரீநாதா தமிழக காவல்துறை உதவி ஐஜியாகவும், சேலம் மாவட்ட காவல் காண்காணிப்பாளா் சிவக்குமார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மதுரை அமலாக்கத்துறை காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார் திருச்சி மாவட்டத்திற்கும், பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் அன்கிட், சென்னை தியாகராய நகர் உதவி ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

இதேபோல் தியாகராயநகர் உதவி ஆணையராக இருந்த அருண் கபிலன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் சக்திவேல் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராகவும், அடையாறு உதவி ஆணையர் மகேந்திரன் சென்னை லஞ்ச ஒழிப்பு துறை காவல் கண்காணிப்பாளராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும் மதுரை வடக்கு உதவி ஆணையராக பணியாற்றி வரும் அரவிந்த், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதுபோல் மேலும் சில ஐபிஎஸ் அதிகாாிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com