தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு...!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு...!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்க எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில், மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

அதன்படி ஒரே நாளில் 369 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 113 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 37 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இல்லை என்று அந்த அறிவிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com