
தமிழகத்தின் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வாக்குகளை சேகரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று மூன்றாவது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கரூரில் விஜய்யின் பிரச்சார கூட நெரிசலில் சிக்கி மூன்று குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் மயங்கி விழுந்து 45 க்கும் மேற்பட்டோர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு விரைந்து பாதிக்கப்பட்ட தொண்டர்களை நேரில் சந்தித்து கொண்டுள்ளார். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கரூருக்கு விரைவு. இந்நிலையில் விஜய் உயிரிழந்த தொண்டர்களை நேரில் பார்க்க வருவாரா? அரசின் சார்பில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழக்கப்படுமா? என்ற கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காவல்துறை சார்பாக கூட்டத்தை ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
கரூர் ,மருத்துவமனைக்குபாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சைக்கு வழங்க திருச்சி, சேலம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் இருந்து சிறப்பு மருத்துவ குழு வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் “கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் @Anbil_Mahesh அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார், இந்நிலையில் நாளை காலை முதலமைச்சர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் காண கரூருக்கு செல்கிறார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் இரங்கல் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பெ. சண்முகம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருத்தத்தை தெரிவித்த கூட்ட நெரிசலில் 33 பேர் உயிரிழந்துள்ளதால் இதை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். 33 பேர் உயிரிழந்ததன் எதிரொலியாக நாளை எடப்பாடி பழனிச்சாமி தருமபுரியில் நடத்த இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை முதலமைச்சர் கலந்து கொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.