``ரூ.5000 கோடி மோசடி.. 'முதலமைச்சருக்கு' என்ன தொடர்பு? குற்றவாளியுடன் எடுத்த புகைப்படங்களை நீக்குவதால் சந்தேகம்!" - CBI விசாரணை கோரும் உதயநிதி!

"MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?" - உதயநிதி
 "₹5,000 Crore Scam: What is the CM's Connection with BLM Premkumar?!" — Udhayanidhi Demands CBI Probe
``ரூ.5000 கோடி மோசடி.. 'முதலமைச்சருக்கு' என்ன தொடர்பு? குற்றவாளியுடன் எடுத்த புகைப்படங்களை நீக்குவதால் சந்தேகம்!" - CBI விசாரணை கோரும் உதயநிதி!
Published on: 
Updated on: 
1 min read

தனியார் தமிழ் செய்தி தொலைக்காட்சியின் இயக்குனரும் பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கோஆபரேட்டிவ் சொசைட்டியின் (BLM) தலைவருமான ஆர். பிரேம் குமார், ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, கேரள மாநிலம் கோழிக்கோடு குற்றப்பிரிவு காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் பிரேம் குமார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த புகைப்படம் தொலைக்காட்சியின் இயக்குநர்கள் மற்றும் தலைவர் முதலமைச்சரை சந்தித்தபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தவெக காவல்துறையின் துணையுடன் இணையத்தில் இருந்து இந்த புகைப்படத்தை நீக்கி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

அவரது பதிவில், "5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?

தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.

பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?

அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?

MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?

இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 "₹5,000 Crore Scam: What is the CM's Connection with BLM Premkumar?!" — Udhayanidhi Demands CBI Probe
அன்பில் மகேஷ் வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்.. நீளும் சிறைவாசம், முத்துக்குமார் சரண்.. நீதிபதி எடுத்த அதிரடி முடிவு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.