53 ஆண்டுகள் சமூகப் பணி - பத்மஸ்ரீ விருது வழங்கப்படுமா?

53 ஆண்டுகள் சமூகப் பணி - பத்மஸ்ரீ விருது வழங்கப்படுமா?
Published on
Updated on
1 min read

ஆலங்குடியில் 53 ஆண்டுகளாக தனி ஒருவராக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் கணேசன் என்பருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

யார் இந்த கணேசன்:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் ஆலங்குடியில் சிறிய அளவிலான பழைய இரும்புக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். 

சமூக சேவை:

இந்நிலையிலும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்வது , விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, தனது வாகனத்தில் 
பிரசவத்திற்கு இலவசமாக அழைத்து செல்வது உள்ளிட்ட சமூக சேவைகளை செய்து வருபவர் தான் கணேசன்.

விருதுகள் பெற்ற கணேசன்:

1968 ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய சமூக சேவைகளை செய்து வரும் கணேசன், தனது 53 ஆண்டு கால சேவையில் இதுவரை ஏழாயிரத்து எழுநூற்று 43 உடல்களை அடக்கம் செய்துள்ளார். இவரது  சமூக சேவையைப் பாராட்டி, பல்வேறு அமைப்புகள் ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. மேலும், கெளரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

அரசு சார்பில் அங்கீகாரம் கிடைக்குமா?:

இருப்பினும், சமூக சேவகர் கணேசனுக்கு, அரசு சார்பில் இது வரை எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே கணேசனின் சமூக சேவையைப் பாராட்டி அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதுகளை வழங்க வேண்டும் என மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் இந்த கோரிக்கையை ஏற்குமா அரசு? 53 ஆண்டுகால சேவையை பாராட்டி, விருதினை வழங்குமா அரசு? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com