குக்கிராமங்களில் தினமும் 55 லிட்டர் குடிநீர் வழங்க வழிவகை: பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு

8 லட்சம் குடும்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் இலவச வீடுகள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குக்கிராமங்களில் தினமும் 55 லிட்டர் குடிநீர் வழங்க வழிவகை: பட்ஜெட்டில்  நிதியமைச்சர் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டபேரவையில் தாக்கல் செய்தார். அதில், கட்டுமானத்திற்கான விலை விவர அட்டவணை விரைவில் மாற்றியமைக்கப்படும் 

குக்கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர்  தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.83 லட்சம் குடும்பங்களுக்கு 2024ஆம் அண்டுக்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும் என்றும் 8 லட்சம் குடும்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் 400 கோடி ரூபாய் செலவில் தூய்மை பாரத இயக்க திட்டம் செயல்படுத்தப்படும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் எனவும் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com