கொடைக்கானலில் 60-வது மலர்க்கண்காட்சி...!!!

கொடைக்கானலில் 60-வது மலர்க்கண்காட்சி...!!!
Published on
Updated on
1 min read

கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு  60-வது மலர்க்கண்காட்சியை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 60-வது மலர்க்கண்காட்சி மற்றும் கோடை விழா துவங்கியது. பிரையண்ட் பூங்காவில் 60-வது மலர் கண்காட்சியை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். இதில், அமைச்சர்கள் ராமச்சந்திரன், சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பூங்காவில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பாண்டா கரடி, வாத்து, ஒட்டகச்சிவிங்கி, பறவை, உள்ளிட்ட உருவங்கள் பல லட்சம் மலர்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இதேபோன்று, காட்டெருமை, வரிக்குதிரை, டோரா புஜ்ஜி, முயல், மயில், உள்ளிட்ட உருவங்கள் காய்கறிகளைக்  கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.  அத்துடன் பூங்கா முழுவதும் பலவகையான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com