12 மணி நேரத்தில் 65 இண்டிகோவிமானங்கள் ரத்து!! பயணிகள் கடும் அவதி!!

அதிகாரிகளுக்கும் பைலட்டுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக ...
indego flight canceled
indego flight canceled
Published on
Updated on
2 min read

கடந்த 12  மணி நேரத்தில் 65 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் காலை 8 மணிக்கு மேல் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில்,  நேற்று இரவு 8 மணியில் இருந்து, இன்று காலை 8 மணி வரை, 12 மணி நேரத்தில், மொத்தம் மொத்தம் 65 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இதில் புறப்பாடு விமானங்கள் 32, வருகை விமானங்கள் 33. மேலும் எத்தியோப்பியா, இந்தோனேசியா உள்ளிட்ட சர்வதேச விமானங்களும் ரத்து.இந்த 65 விமானங்களும், இண்டிகோ ஏர்லைன்ஸ் என்ற தனியார் விமான நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தியா முழுவதும் இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளுக்கும் பைலட்டுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன கடந்த 12 மணி நேரத்தில் 65 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 8:00 மணிக்கு மேல் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 

நேற்று இரவு 8 மணியில் இருந்து, இன்று காலை 8 மணி வரையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர், அந்தமான், ஹைதராபாத், கௌஹாத்தி,பெங்களூர், விசாகப்பட்டினம், கொச்சி, கோவை மற்றும் இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட 32 இடங்களுக்கு செல்ல வேண்டிய, புறப்பாடு விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி, புவனேஸ்வர், ராய்ப்பூர், இந்தூர், புனே, கோவை உள்ளிட்ட 33 இடங்களில் இருந்து, சென்னை வரும்  இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும், இன்றும் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 12 மணி நேரத்தில், 65 விமான சேவைகள், சென்னை விமான நிலையத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன குறிப்பாக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு விமானத்தை இயக்கி விட்டு போதிய இடைவெளி ஓய்வழிக்காமல் பைலெடுகளை மீண்டும் விமானத்தை இயக்க வேண்டும் என குறிப்பிட்ட தனியார் விமான நிறுவனங்கள் கூறுவதாகவும் அப்படி விமானங்களை இயக்கினால் பைலட்டுகளின் விமானத்தை இயக்கும் உரிமம் ரத்து செய்யப்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவிக்கிறது இதனால் தங்கள் உரிமைத்தை பாதுகாத்துக் கொள்ள பைலட்டுகள் விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதால்


குறிப்பிட்ட தனியார் விமான நிர்வாகத்திற்கும் பைலெட்களூக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் காரணமாகவும், சென்னையில் மட்டுமில்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களிலும், இதே போல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் பாதிக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் 8 மணிக்கு மேல் ரத்து செய்யபப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தற்சமயம் வரை 8 மணிக்கு மேல் 13 விமானங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தகவலும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com