
வடசென்னை தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவர் நேற்று காலை தனது மனைவி மற்றும் ஏழு வயது மகளுடன் கடைக்கு சென்று விட்டு திரும்பி உள்ளார். அப்போது ஒரு வீட்டின் உரிமையாளர் கீழ்தளத்தில் தனது அமெரிக்க வகை நாயை வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வரக்கூடிய அந்த அமெரிக்கன் புல் எனக் கூடிய நாய் ஏழு வயது சிறுமியின் முகத்தை எகிரி கடித்து குதறி உள்ளது.
இதை சற்றும் எதிர்பார்க்காத அவருடைய தந்தை ராஜா நாயிடமிருந்து போராடி தனது குழந்தையை மீட்டு உள்ளார். இதனை எடுத்து காயம் அடைந்த அந்த 7 வயது சிறுமி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமிக்கு தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை எடுத்து மருத்துவமனை தகவலின்பெயரில் ஆர் கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மருத்துவமனையில் தற்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மற்றும் சுகாதாரத்துறை மருத்துவர்கள் சிறுமியையும் சிறுமியின் பெற்றோரையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.