
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் சந்திப்பு வழியாக கஞ்சா கடத்த இருப்பதாக மாநகர் காவல் ஆணையரின் தனிப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் பேரில் அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த பொழுது அதில் மூட்டைகளிலில் 72 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மதுரை ஐயர் பங்களா கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன்(42) என்பது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக திருப்பாலை காவல்துறையினர் bmw, Fourtunur உள்ளிட்ட 5 விலையுரந்த சொகுசு கார்,14 செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு தங்க சங்கிலி, உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து பரமேஸ்வரன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தற்பொழுது பரமேஸ்வரன் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள அவரது மனைவி விஜயலட்சுமி தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
காவல்துறையினரின் விசாரணையில் இவர் மீது செல்லூர் பகுதியில் கஞ்சா விற்றதாக இரண்டு வழக்குகள் ஏற்கனவே பதியப்பட்டு வெளியே வந்த நிலையில் தற்பொழுது சொகுசு வாழ்க்கைக்காக ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 10 செல்போன்களை கொண்டு விற்பனை செய்து வந்தது தெரிய வந்திருக்கிறது. தொடர்ந்து எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தார். எப்படி விநியோகம் செய்தார் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.