74 குடியரசு தினம்: பாஜக கொடி கம்பத்தில் தேசிய கொடி

74 குடியரசு தினம்: பாஜக கொடி கம்பத்தில் தேசிய கொடி
Published on
Updated on
1 min read

பொன்னேரி அருகே பாஜக கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளதால் சர்ச்சை. 74வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பாஜக கொடி கம்பத்தில் பறக்கும் தேசிய கொடி.

நாடு முழுவதும் இந்திய திருநாட்டின் 74 ஆவது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்திய நிலையில் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியில் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆரணி பேரூராட்சியில் காவல் நிலையம் எதிரே பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் பாஜகவின் கொடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. வழக்கமாக சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் கட்சி கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றாமல் தனியாக கொடி கம்பத்தை அமைத்து அதில் தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். இந்த சூழலில் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்திலேயே தேசியக் கொடியை ஏற்றி உள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com