மீட்பு பணியில் 75 ஆயிரம் போலீசார்... தமிழக காவல்துறை அறிவிப்பு...

கனமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 75 ஆயிரம் பேர் மீட்பு பணியில் ஈடுபட போவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
மீட்பு பணியில் 75 ஆயிரம் போலீசார்... தமிழக காவல்துறை அறிவிப்பு...
Published on
Updated on
1 min read

தமிழக காவல்துறை சார்பில் இன்று முதல் 12 தேதி வரை கனமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மாநிலம் முழுவதும் காவல் நிலைய அதிகாரிகள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல் படை என சுமார் 75 ஆயிரம் பேர் மீட்புப் பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். இவர்களில் பத்தாயிரம் பேர் விசேஷ உயிர் காக்கும் பயிற்சி எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

250 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புப்படை, மீட்புப் படகுகள், மரம் வெட்டும் கருவிகள் மற்றும் சுவர் துளைக்கும் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.  பத்தாயிரம் ஊர்க்காவல் படை வீரர்கள் மாநிலம் முழுவதும் காவல் துறையினரோடு இணைந்து செயல்பட தயார் நிலையில் உள்ளனர்.

10 மிதவை படகுகள் மற்றும் 364 பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற ஊர்க்காவச் படையினர் நீர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com