வயது வித்தியாசம் காரணமாக கணவன் - மனைவி இடையே தகராறு...விரக்தியில் கர்ப்பிணி பெண் தற்கொலை!

சமயபுரம் அருகே குடும்ப பிரச்சனையில் 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வயது வித்தியாசம் காரணமாக கணவன் - மனைவி இடையே தகராறு...விரக்தியில் கர்ப்பிணி பெண் தற்கொலை!
Published on
Updated on
1 min read

சமயபுரம் இந்திராநகர்  காமராஜர் தெருவை சேர்ந்தவர் மஞ்சு பிரியா. பெற்றோரை இழந்த மஞ்சு பிரியா தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் பாபு என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஒரு மகன்  உள்ள நிலையில் வயது வித்தியாசம் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் விரக்தியடைந்த மஞ்சு பிரியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆன நிலையில் இச்சம்பவம் குறித்து திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com