கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து...3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

Published on
Updated on
1 min read

செங்கம் அருகே, கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியில் பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த காரும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பெண் ஒருவர் பலத்த காயத்துடன் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இந்த கோர விபத்து சம்பவம் தொடர்பாக செங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com