குல்பி ஐஸ் சாப்பிட்டு 90-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்...!

குல்பி ஐஸ் சாப்பிட்டு 90-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்...!
Published on
Updated on
1 min read

விழுப்புரம் அருகே குல்ஃபி சாப்பிட்டு 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.  

முட்டத்தூர் கிராமத்தில் வாகனத்தில் விற்பனை செய்யப்பட்ட குல்பி ஐஸ்ஸை வாங்கி சாப்பிட்ட 90-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குல்பி ஐஸ் சுகாதாரமற்ற தண்ணீரில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ததினால் அதை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 90-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணா புகழேந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி பழங்கள் பிரட் பழச்சாறுகளை வழங்கினார்கள்.

இந்த நிலையில்  ஐஸ் தயாரிப்பு நிலையத்திற்கு சீல் வைத்து அதனை விற்பனை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com